நடிகமணி.வி.வி.வைரமுத்து Nadikamani.V.V.Vyramuthu

 

Kamalam

Kamal

Families

Friends

Guiders

School

Jobs

கமலம்

கமல்

குடும்பம்

நண்பர்

வழிகாட்டி

பாடசாலை

தொழில்

 

 

Home

 

Jaffna

Valikamam

Vadamarachchy

Thenmarachchy

Islands

Northern Province

About

முகப்பு

 

யாழ்ப்பாணம்

வலிகாமம்

வடமாராட்சி

தென்மாராட்சி

தீவுகள்

வடமாகாணம்

நாங்கள்

 

நடிகமணி.வி.வி.வைரமுத்து Nadikamani.V.V.Vyramuthu

 

 

 

 

 

 

         

நடிகமணி வி.வி.வைரமுத்து

மண் உலகு: பெப்ரவரி 11, 1924      ---   விண் உலகு: ஜூலை  08, 1989

 

உதித்தது        :  காங்கேசந்துறை, இலங்கை

 

தந்தையார்      :  வைரவி வேலப்பா

தாயார்          :  ஆச்சிக்குட்டி

 

வளர்ப்புத் தந்தை :  ஆசிரியர்.க.முருகேசு, அல்வாய்

வளர்ப்புத் தாயார் :  இலட்சுமி

 

மூத்த சகோதரர்  :  காசிநாதன்.

தாய்மாமன்      :  பிள்ளைநாயகம்

 

பாடசாலைகள்   :  காங்கேசன்துறை சைவவித்தியாலயம் - 1929

                :  கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லுரரி - 1932

 

ஆசிரியர்கள்       அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா,

                  சைவப் புலவர் சி. வல்லிபுரம்,

                  ஆ. ம. செல்லத்துரை,

                  க. முருகேசு

 

      

ஈழத்தின் இசை நாடக வரலாற்றில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு மாபெரும் கலைஞராகத் திகழ்ந்தவர் அமரர் நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்கள் அன்று மட்டுமல்ல இன்றும்கூட அரிச்சந்திரா நாடகமென்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது வைரமுத்து அவர்கள்தான்!.

 

கலைஞர்கள் பல நாடகங்களில் பல பாத்திரங்களில் நடிப்பார்கள். ஆனால் அரிச்சந்திரனாக நடித்தால் மட்டும் அவர்களை நடிகமணி வைரமுத்து அவர்களுடன் ஒப்பிட்டே பார்ப்பார்கள். அப்படியாக மக்கள் மனங்களில் எல்லாம் அரிச்சந்திரனாகவே வாழ்ந்து மறைந்தவர் இவர்.

இவர் நடித்த "அரிச்சந்திரா மயானகாண்டம் நாடகம் மட்டும் 3000க்கும் அதிகமான தடவைகள் மேடையேற்றப்பட்டு பெரும் சாதனையை நிலை நாட்டியிருப்பதோடு இலங்கை வானொலியிலும் பல தடவைகள் ஒலிபரப்பப்பட்டிருப்பதும் இலங்கையில் தயாரான "நிர்மலா என்னும் திரைப்படத்தில் இன் நாடகத்தின் ஒரு சிறு காட்சி இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்த நாடகமே இலங்கை ரூபவாகிணி கூட்டுத்தாபனம் ஒளிபரப்பு செய்த முதல் தமிழ் நாடகமும் ஆகும்.

எவ்வளவுதான் புகழ் உச்சியில் இருந்தபோதும் சிறிதேனும் தலைக்கனம் இல்லாத அர்ப்பணிப்பு மிக்க கலைஞர் நடிகமணி அவர்கள். பாடி நடிப்பது மட்டுமல்ல! மிருதங்கம் ஆர்மோனியம் வயிலின் ஜலதங்கரம் போன்ற வாத்தியங்களை இசைப்பதிலும் வல்லவராய் இருந்ததோடு இலங்கை வானொலியில் கர்நாடக இசைக் கச்சேரிகளும் செய்திருக்கின்றார்.

சிறந்த நாடக நெறியாளரான இவர் கலைப்பணிமீது கொண்ட பற்றால் தான் பணிபுரிந்து வந்த ஆசிரியத் தொழிலைத் துறந்து "வசந்தகான சபா என்னும் நாடக மன்றத்தை ஆரம்பித்து சரித்திர புராண இதிகாச நாடகங்களை தத்ரூபமாக நடித்து மக்கள் மனங்களில் பதியவைத்திருந்தார்.

கலையரசு சொர்ணலிங்கம் ஜயா அவர்களே இவருக்கு "நடிகமணி" என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்திருந்தார்.

 

பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் எழுதிய நாடக தீபம் என்னும் நூலில் தமிழ் நாடகத்தின் மரணிக்காத குரல் என்று வைரமுத்து அவர்களுக்கு புகழாரம் சூட்டியிருக்கின்றார்.

 

அது மாத்திரமல்ல பேராசிரியர் திரு வித்தியானந்தன் அவர்கள் கலைக் கோமான் என்னும் விருதையும்

 

பேராசிரியர் திரு கைலாசபதி அவர்கள் "ந‌வரச திலகம் என்னும் விருதையும்

 

தென்னிந்திய தமிழ் மூதறிஞர் திரு.மா.பொ.சிவஞானம் அவர்கள் "நாடக வேந்தன் என்னும் விருதினையும்

முன்னாள் வட்டுக்கோட்டைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் "ந‌டிப்பிசைச் சக்கரவர்த்தி என்னும் விருதினையும்

 

பாசையூர் சென்றோக் படிப்பகத்தினர் "முத்தமிழ் வித்தகர் என்னும் விருதினையும் வழங்கி

வைரமுத்து அவர்களைக் கௌரவப் படுத்தியிருக்கின்றார்கள்.

 

இவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் 2004ம் ஆண்டில் இவருக்கு கலாநிதி பட்டத்தை வழங்கி கௌரவித்திருந்ததும் நடிகமணி அவர்களின் கலைப்பணிக்குக் கிடைத்த மேலதிக சிறப்பாகும்.