...  நிறைவான வாழ்வு ...  ABUNDANT LIFE   ...   நிறைவான வாழ்வு  ...

Kamalam

Kamal

Families

Friends

Guiders

School

Jobs

கமலம்

கமல்

குடும்பம்

நண்பர்

வழிகாட்டி

பாடசாலை

தொழில்

Mr.V.Tharmaseelan

Mr.S.Thevabalan.Arnold

Mr.Arther.G.Joseph

Mr.G.N.Rajasingham

Mrs.M.Mather

Mrs.A.R.Jeyanayagam

Mr.P.R.Ariyapooshanam

Mr.W.Gnanasigamany. Annappah

 Pandithar Mr.M.Kathiravelpillai

 wef.1937 Our Teachers எங்கள் ஆசிரியர்கள

 Mr.E.Velauthar  திரு.ஈ.வேலாயுதா் 1836 – 1847

Mr.P Thiruvilankam  திரு.ப.திருவிளங்கம் 1848 – 1864

Mr.Poniah Strong  திரு.பொன்னையா ஸ்ரோங் 1864 – 1871

Mr.Vairavanathan Page திரு.வைரவநாதன் பேஜ் 1872 – 1881

Mr.T.Arunasalam திரு.ரீ.அருணாசலம் 1882 – 1889

Mr.A.M.Nathaniel திரு.ஏ.எம்.நதானியல் 1889 – 1899

Mr.Carol Visvanathar திரு.கரோல் விஸ்வநாதா் 1900 – 1911

Mr.Edmon Fitch திரு.எட்மன் பிட்ஜ் 1911 – 1919

Mr.Scader Manickavasagar திரு.ஸ்காடா் மாணிக்கவாசகா் 1911 – 1926

Mr.T.G.Thomas திரு.ரீ.ஜீ.தோமஸ் 1926 - 1931

Mr.J.S.Navaratnam திரு.ஜே.எஸ்.நவரட்னம் 1931 – 1936

Mr.S.P.Rajaratnam  திரு.எஸ்.பி.இராஜரட்னம் 1937 – 1941

Mr.S.V.Alagaratnam  திரு.எஸ்.வீ.அழகரட்னம் 1941 – 1960

Mr.J.V.Thambynayagam திரு.ஜே.வி.தம்பிநாயகம்.1961 – 1964

Mr.J.M.G.Samuel  திரு.ஜே.எம்.ஜீ.சமூவேல 1964 – 1966

Mr.V.H.Sampanthar  திரு.வீ.ஏச்.சம்பந்தா் 1966 – 1970

Mr.K.Kailayanathan திரு.கைலாயநாதன் 1971 – 1975

Mr.K.G.Annappah  திரு.கே.ஜீ.அன்னப்பா 1971

Mr.K.Vaithiyanatha Samra திரு.கே.வைத்தியநாத சா்மா 1975 – 1978

Mrs.P.Sivanantharajan திருமதி.பீ.சிவானந்தராசா 1978 – 1980

Mr.V.Suntharathas திரு.வீ. சுந்தரதாஸ் 1980 – 1983

Mr.V.Ponnudurai திரு.வீ.பொன்னுத்துரை 1983 – 1989

Mrs.C Yogeswaran திருமதி.சீ.யோகேஸ்வரன் 1996 – 1998 1999 – 2000

Mr.A.M.Arunasalam திரு.ஏ.எம்.அருணாசலம் 1989---1996 1998---1999 2000---2004

Mrs.Venuka Shanmugaratnam திருமதி. வேணுகா சண்முகரத்தினம் 2004–2010

Mr.S.Jeyaweerasingham திரு.எஸ்.ஜெயவீரசிங்கம் 13.02.2011– 05.06.2011

Mr.N.Sivakadachcham திரு.N.சிவகடாச்சம் 2011–2013

Mr.T.Mathavan திரு.ரீ.மாதவன் 2013–2015

Mr.A.Perinpanayagam  திரு.ஆ.பேரின்பநாயகம் 2015.09.01 - up to date

 
மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை - 1836-2019 - Manipay Memorial English School

1836 - 2019

 

Mr.A.Perinpanayagam 

திரு.ஆ.பேரின்பநாயகம்

2015.09.01-up to date

 

Mr.T.Mathavan 

திரு.ரீ.மாதவன்

2013–2015

 

 

Mr.N.Sivakadachcham        

திரு.N.சிவகடாச்சம்

2011–2013

 

Mr.S.Jeyaweerasingham

திரு.எஸ்.ஜெயவீரசிங்கம்

13.02.2011– 05.06.2011

 

Mrs.Venuka Shanmugaratnam

திருமதி. வேணுகா சண்முகரத்தினம்

2004–2010

 

Mr.A.M.Arunasalam 

திரு.ஏ.எம்.அருணாசலம்

1989---1996

1998---1999

2000---2004

 

   Mrs.C.Yogeswaran      

திருமதி.சீ.யோகேஸ்வரன்

1996 – 1998

1999 – 2000

 

Mr.V.Ponnudurai

திரு.வீ. பொன்னுத்துரை 

1983 – 1989

 

 

Mr.V.Suntharathas    

திரு.வீ. சுந்தரதாஸ்

1980 – 1983

 

 

 

 

Mrs.P.Sivanantharajan

திருமதி.பீ.சிவானந்தராசா

1978 – 1980

 

Mr.K.Vaithiyanatha Samra   

திரு.கே.வைத்தியநாத சா்மா

1975 – 1978

 

 

 Mr.K.Kailayanathan

திரு.கைலாயநாதன்

1971 – 1975

 

Mr.K.G.Annappah 

திரு.கே.ஜீ.அன்னப்பா

1971

 

Mr.V.H.Sampanthar  

திரு.வீ.ஏச்.சம்பந்தா்

1966 – 1970

 

  

Mr.J.M.G.Samuel   

திரு.ஜே.எம்.ஜீ.சமூவேல்

1964 – 1966  

 

Mr.J.V.Thambynayagam    

திரு.ஜே.வி.தம்பிநாயகம்.

1961 – 1964

 

 

Mr.S.V.Alagaratnam 

திரு.எஸ்.வீ.அழகரட்னம்

1941 – 1960  

 

 

Mr.S.P.Rajaratnam 

திரு.எஸ்.பி.இராஜரட்னம்

1937 – 1941

 

 

 

Mr.J.S.Navaratnam 

திரு.ஜே.எஸ்.நவரட்னம் 

1931 – 1936

 

 

 

Mr.T.G.Thomas 

திரு.ரீ.ஜீ.தோமஸ் 

1926 - 1931

 

 

Mr.Scader Manickavasagar

திரு.ஸ்காடா் மாணிக்கவாசகா்

1911 – 1926

 

 

Mr.Edmon Fitch

திரு.எட்மன் பிட்ஜ்

1911 – 1919

 

 

Mr.Carol Visvanathar

திரு.கரோல் விஸ்வநாதா்

1900 – 1911

 

Mr.A.M.Nathaniel

திரு.ஏ.எம்.நதானியல்

1889 – 1899

 

 

Mr.T.Arunasalam

திரு.ரீ.அருணாசலம்

1882 – 1889

 

Mr.Vairavanathan Page 

திரு.வைரவநாதன் பேஜ்

1872 – 1881

 

          

Mr.Poniah Strong 

திரு.பொன்னையா ஸ்ரோங்

1864 – 1871

 

 

 

Mr.P Thiruvilankam 

திரு.ப.திருவிளங்கம்

1848 – 1864

 

       

Mr.E.Velauthar 

திரு.ஈ.வேலாயுதா்

1836 – 1847

 

 

 

wef.1937

Our Teachers

எங்கள் ஆசிரியர்கள்

 

 

 

 

Pandithar

Mr.M.Kathiravelpillai.

 

 

Mr.W.Gnanasigamany. Annappah.

 

 

Mr.P.R.Ariyapooshanam

 

Mrs.A.R.Jeyanayagam

 

Mrs.M.Mather

 

 

 

Mr.G.N.Rajasingham

 

 

 

Mr.Arther.G.Joseph

 

 

 

Mr.S.Thevabalan.Arnold

 

 

 

Mr.V.Tharmaseelan

 

 

 

Mrs.U.Suntharathas

 

 

 

Mr.K.Sinnathurai

 

 

 

 

Mr.S.Balasingham

 

 

 

Mr.A.S.Lawrence

 

 

 

Mr.A.S.Ayathurai

 

 

 

Mr.K.Ayathurai

 

 

 

Mrs.E.A.Lawrence

 

 

Librarian

Mrs.Manonmany.

Mahendranathan

 

 

 

 

 

 

புகழ்பெற்ற பழைய மாணவர்கள்

 

 

Kalaiyasasu

Mr.K.Sornalingam

 

 

Architect

Mr.V.S. Thurairajah

 

 

 

“ V.Thiru”

Mr.V.Thirunavukkarasu

 

 

 

Mr.Maharajah

Mahaventhan

 

 

 

 

Mr.Karalasingham Indran

 

 

 

 

 

 

 

 

 

 

Compiled By

Mr.K.Kamalasekaram

Memorian 1953-1968

 

 

 

 

 

 

 

 

 

 

 

 History of Manipay Memorial

மானிப்பாய் மெமோறியலின் வரலாறு

நிறுவனர்களும் அதிபர்களும்   Founders & Principals

   மானிப்பாய் மெமோறியல் பாடசாலை தனது 183வது வருடத்தை 2019ம் வருடம்; ஜூன் மாதம் 12ம் திகதியுடன் நிறைவு செய்கிறது.

 

   1836-1840ன் இடைப்பட்ட காலத்தில் இலங்கை அமெரிக்க மிசனரிமாரின் கல்விச் சேவையின் பிரதிபலனாக யாழ்ப்பாண பிராந்தியத்தில் பல பாடசாலைகள் நிறுவப்பட்டன.  அப்பாடசாலைகளில் மானிப்பாய் மிசன் பாடசாலை அல்லது மானிப்பாய் ஸ்ரான்டட் பாடசாலை (Manipay Mission School or Manipay Standard School) என்ற பெயரில் விளங்கியது.

 

  எமது மெமோறியல் பாடசாலை வட இலங்கையில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பித்த இரண்டாவது தொன்மை வாய்ந்த பழம் பெரும் கல்விச்சாலை என்பதினை பெருமையுடன் மானிப்பாய் மெமோறியல் சமூகம் நினைவு கூருகிறது.

 

   18ம் நூற்றாண்டுகளின் எமது நாட்டுக்கு வருகை தந்த அமெரிக்க ஆங்கில மிசனரிமார் குறிப்பாக யாழ்குடா நாட்டுத்; தமிழரின் கல்விப் பாரம்பரியத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியமை யாவரும் ஏற்றுக்கொள்வர்.

    மிசனரிமாரின் கல்விக்கூடங்கள் தெல்லிப்பழை உடுவில், உடுப்பிட்டி, பண்டத்தரிப்பு, சாவகச்சேரி, வட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டது போன்று
1836ல் மானிப்பாயில் அமெரிக்க மிசனரிமாரின் கல்விச் சேவையின் ஞாபகார்த்தமாக அதாவது “மெமோறியல்” என்ற ஆங்கிலப் பெயருடனான “ஞாபகார்த்தம்-Memorial” என்ற பொருள்;படும் எமது மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை நிறுவப்பட்டது.

   
18ம் நூற்றாண்டில் மிசனரிமாரின் பெரும் கொடையாக இலங்கையில் முதலாவது வைத்தியக்கல்லூரி மானிப்பாயில் அமைக்கப்பட்டமை மானிப்பாயின் பெருமையை உலகறிய வைத்த விடயமாகும். மானிப்பாயிலுள்ள வைத்தியக் கலாநித்p கிறீன் மெமோறியல் வைத்திய சாலையே அந்த பெருமைக்குரிய திருத்தலமாகும்.

 

1836 – 1847

வேலாயுதர் பாடசாலை - Velauthar School

உயர்.திரு.ஈ.வேலாயுதா்  - Mr.E.Velauthar          

 

மானிப்பாய் கிறீன் மெமோறியல் வைத்திய சாலையின் தென்கிழக்கு மூலையில் ஆசிரியர் உயர்.திரு.ஈ.வேலாயுதர்- Mr.E.Velauthar அவர்கள் ஏழு(7) மாணவர்களுடன் சிறிய கொட்டிலில் பாடசாலையை 1836ல் ஆரம்பித்து 1847வரை 11வருடகாலம் கிறீன் மெமோறியல் வைத்தியசாலை வளவிலேயே மானிப்பாய் மக்கள் பயன் பெறத்தக்க வகையில் நடாத்தினார்.

 

அக்கால வழமைப்படி பாடசாலை வேலாயுதர் அவர்களால் நடாத்தப்பட்டு வந்தமையால்   பாடசாலை “வேலாயுதர் பாடசாலை” என அழைக்கப்பட்டது.

 

Velauthar School -  (1836—1847)  

The first Principal Mr.E.Velauthar started the school with seven (7) students.

The School was in the south east corner of Manipay Green Memorial Hospital.

 referred to as “Velauthar School”.

 

Manipay Green Memorial Hospital was the First Medical School

started in Ceylon in the 18th century.

 

1848-1864

திருவிளங்கம் பாடசாலை - Thiruvilankam School

 

உயர்திரு.பீ.திருவிளங்கம் - Mr.P.Thiruvilankam

 

திரு.ஈ.வேலாயுதர் அவர்களைத் தொடர்ந்து 1848லிருந்து 1864வரை

ஆசிரியர் திரு.பீ.திருவிளங்கம் (Mr.P.Thiruvilankam) அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வழமைபோல

“திருவிளங்கம் பாடசாலை” என்றே அழைக்கப்பட்டது.

 

Thiruvilankam School (1848-1864)

Later Mr.Velauthar started the central school in the north east coner,

refered as “Page School” later named as “Thiruvilankam School” 

under Mr Thiruvilankam’s administration.

 

1864 – 1871

ஸ்ரோங் பாடசாலை  - Strong school

 திரு.பொன்னையா ஸ்ரோங்  Mr.Poniah Strong                 

வேலாயுதர் திருவிளங்கம் அவர்களால் நடாத்தப்பட்ட பாடசாலை 1864லிருந்து 1871வரை திரு.பொன்னையா.ஸ்ரோங்(Mr.Poniah.Strong) அவர்களால் தொடர்ந்து நிர்வகிக்கப்பட்டு வழமைபோல “ஸ்ரோங்;  பாடசாலை” என்றே அழைக்கப்பட்டது.
 
இக்கால கட்டத்தில் வேலாயுதர் பாடசாலை திருவிளங்கம்  பாடசாலை அல்லது ஸ்ரோங்  பாடசாலை என அழைக்கப்பட்ட பாடசாலை அவ்வளவு முன்னேற்றமுள்ள கல்விச் சாலையாகக்  காணப்படவில்லை.

Strong School (1864-1871)

Then it named “Strong School” under Mr Ponniah Strong’s administration.

Memorial became the school to teach in English Mediam in North Province.

 

1872 – 1881

பேஜ் பாடசாலை & மத்திய பாடசாலை

Page School & Central School

திரு.வைரவநாதன் பேஜ்  Mr.Vairavanathan Page 

இக்கால கட்டத்தில் 1872லிருந்து 1881வரையான காலப்பகுதிகில் கிறீன் மெமோறியல் வைத்திய சாலையின் வடகிழக்கு மூலையில் திரு வைரவநாதர் பேஜ் அவர்களால் தலைமை ஆசிரியராக மத்திய பாடசாலை (Central School) என்று அழைக்கப்பட்ட ஒரு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டது. ஆயினும் வழமைபோல இப்பாடசாலையும் “பேஜ் பாடசாலை;” என அழைக்கப்பட்டது.

வேலாயுதர் பாடசாலை திருவிளங்கம் பாடசாலை அல்லது ஸ்ரோங்; பாட-சாலை என அழைக்கப்பட்ட பாடசாலையும் மத்திய பாடசாலை (Central School) என்று அழைக்கப்பட்ட பேஜ் பாடசாலையும் கிறீன் மெமோறியல் வைத்திய சாலையின் தென்கிழக்கு மூலையிலும் வடகிழக்கு மூலையிலும் தொடர்ந்து இயங்கி வந்தன.
 

1882 – 1889

 திரு.ரீ.அருணாசலம் - Mr.T.Arunasalam 

 

1889 – 1899

 திரு.ஏ.எம்.நதானியல் - Mr.A.M.Nathaniel    

 

திரு.வைரவநாதர்.பேஜ் (Mr.Vairavanathan Page ) அவர்களைத் தொடர்ந்து

1882லிருந்து 1889வரை திரு.ரீ.அருணாசலம் (Mr.T.Arunasalam) அவர்களின் தலைமையிலும்

1889லிருந்து 1900வரைதிரு.ஏ.எம்.நதானியல்(Mr.A.M.Nathaniel ) அவர்களின்

தலைமையிலும் பாடசாலை இயங்கிவந்தது.

 

1900

மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை

Manipay Memorial English School

1900

கிறீன் மெமோறியல் வைத்திய சாலையின் ஒரேவளவில் இரு எல்லையில் இயங்கி வந்த வேலாயுதர் பாட-சாலையும் பேஜ் பாடசாலையும் 1900ல் திரு ஏ.எம்.நதானியல் அவர்களின் தலைமையில் மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை - Manipay Memorial English School என்ற பெயரில் ஒன்றிணைக்கப்பட்டன.

 

Manipay Memorial English School --1900

“Velauthar School” and “Page School” were amalgamated and named “Manipay Memorial English School”

 

வடஇலங்கையில் ஆங்கிலம் போதித்த மிகத் தொன்மையான கல்வி நிலையமாக மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை விளங்குகிறது.
 

மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை மிசனரியைச் சேர்ந்த

திரு.ஸ்கொட்     (Mr.Scot),

திரு.பிக்னல்      (Mr.Bicknal)

திரு.பங்கர்       (Mr.Buncker )

திரு.புக்வோல்டர் (Bookwalter)

 

ஆகிய பிரபல அமெரிக்க ஆங்கிலேய முகாமையாளர்களால் நிருவகிக்கப்பட்டு அக்காலத்தில் வடபகுதியில் பிரபல தமிழ் பிரமுகர்கள் மொழி வல்லுனர்கள், சேவையாளர்கள், சமூகவாதிகள், அரசியல்வாதிகள் பிரபல சட்டத்தரணிகள் உருவாக காரணமாய் திகழ்ந்தது.

பாடசாலை ஆரம்பித்த 50ம் வருட காலத்தில் திரு ஏ.எம்.நதானியல் அவர்கள் அதிபராக இருந்தபோது கல்வியதிகாரியாக இருந்த திரு.ஸ்கொட்(
Mr.Scot) எமது பாடசாலை மெமோறியலுக்கு வருகை தந்தபோது

     “அகில இலங்கை ரீதியல் ஒழுக்கம், கல்வி, புறக்கருமங்கள் ஆகிய துறைகளில்

     மெமோறியல் முதன்மை இடம் வகிக்கிறது”

என்று உத்தியோக பூர்வமாக குறிப்பு எழுதியிருந்தமை இன்றும் மெமோறியல் சமூகம் இன்றும் பெருமைப்படும் விடயமாகும்.

ஆரம்பம் தொட்டு மெமோறியலுக்கு அளித்த இவர்களின் சேவையை மெமோறியல் சமூகம் காலாகாலம் நினைவு கூரத்தக்க வகையிலேயே பாடசாலையின் விளையாட்டு இல்லங்கள்

          பேஜ் இல்லம்    (Page House),      மஞ்சள் நிறம்  Yellow Colour

          பிக்னல் இல்லம் (Bicknal House),    பச்சை நிறம் Green Colour

          ஸ்கொட் இல்லம்(Scot House)       நீல நிறம்  Blue Colour

என்று பெயரிடப்பட்டு வருடாந்த இல்லப் போட்டிகள் சிறப்பாக நடந்தேறி வருகின்றது.
 


 
 

1900 – 1911

மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை

Manipay Memorial English School

 

Mr.Carol Visvanathar

திரு.கரோல் விஸ்வநாதா்

 

Manipay Memorial English School --1900

“Velauthar School” and “Page School” were amalgamated and

named Manipay Memorial English School”

 

1911 – 1919

Mr.Edmon Fitch              

திரு.எட்மன் பிட்ஜ்

 

1911 – 1926

Mr.Scyder Manickavasagar    

திரு.ஸ்காடா் மாணிக்கவாசகா்

 

1926 - 1931

Mr.T.G.Thomas               

திரு.ரீ.ஜீ.தோமஸ்

 

1931 – 1936

Mr.J.S.Navaratnam                 

திரு.ஜே.எஸ்.நவரட்னம்

 

ஆரம்பித்த 50ம் வருட காலத்திலேயே பெருமை பெற்ற மெமோறியலின் தலைமை ஆசிரியர்களாக அதிபர்களாக திரு.ஏ.எம்.நதானியல் அவர்களைத் தொடர்ந்து

1900லிருந்து 1911வரை திரு.கரோல் விஸ்வநாதர் (Mr.Carol Visvanathar ) அவர்களும்

1911லிருந்து 1919வரை வண.எட்வின்.பிட்ச் (Mr.Edmon Fitch ) அவர்களும்

1919லிருந்து 1926வரை திரு.ஸ்கைடர். மாணிக்கவாசகர் (Mr.Scyder Manickavasagar ) அவர்களும் 1926லிருந்து 1931வரை திரு.ரீ.ஜீ.தோமஸ் (Mr.T.G.Thomas ) அவர்களும்

1931லிருந்து 1936வரை திரு.ஜே.எஸ்.நவரத்தினம் (Mr.J.S.Navaratnam  ) அவர்களும்

பாடசாலையை திறம்பட வழிநடாத்திச் சென்றனர்.

 

1937 – 1941

Manipay Memorial English School

Mr.S.P.Rajaratnam                

திரு.எஸ்.பி.இராஜரட்னம

மானிப்பாயில் மெமோறியல் சமூகத்தில் பழம்பெரும் கல்விப் பரம்பரையில் வழிவந்த திரு.எஸ்.பீ.இராஜரத்தினம் (Mr.S.P.Rajaratnam) அவர்கள் 1937லிருந்து 1941வரை மெமோறியலை தலைமை ஆசிரியராக சிறப்பாக வழி நடாத்திப் பிரகாசிக்கச் செய்தார்.

இவரது சேவை அச்சுவேலிப் பாடசாலைக்கு தேவைப்பட்டதால் அங்கு மாற்றப்பட்டார்.

 

Memorial School Staff 1941

 

 

1941 – 1960

Manipay Memorial English School

Mr.S.V.Alagaratnam          

திரு.எஸ்.வீ.அழகரட்னம்

மெமோறியலின் வரலாறு பொன் எழுத்துக்களால் எழுதப்படத் தக்க பொற்காலமாக சேவையாற்றிய திரு.எஸ்.வி.அழகரத்தினம் (Mr.S.V.Alagaratnam) அவர்கள் 1941ல் அதிபராக பதவிஏற்று கல்லூரி வரலாற்றில் மிக நீண்ட காலம் சேவையாக 1960ம் ஆண்டுவரை சேவையாற்றி “மெமோறியலின் தந்தை” (Father of Memorial) என்ற பெருமையோடு சேவைக் காலத்திலேயே மதிக்கப்பட்டார்.

1944ல் திரு.எஸ்.வி.அழகரத்தினம் அவர்கள் தலைமை ஆசிரியராக பதவி வகித்த காலத்தில் பாடசாலை சிரேஸ்ட இடைநிலைப் பாடசாலையாக
(Senior School Certificate  Class - SSC Class) தரமுயர்ந்தது.
அந்த சந்தர்ப்;பத்தில் பாடசாலைக்கான வசதியான நிரந்தர இடமோ கட்டடமோ இல்லாதிருந்ததால் அதிபர் மானிப்பாய் பிரமுகர்கள் வசதி படைத்தோர் பலரை நாடினார்

அப்போது மானிப்பாயில் சீரிய கொடைவள்ளர்களான அரியரத்தினம் குடும்பத்தில் “அரியம்மா” அல்லது “அரியம் அக்கா” என்றழைக்கப்படும் சீமாட்டியார் தற்போது மெமோறியல் அமைந்திருக்கும் ஏக்கர் காணியை 1946ல் பாடசாலைக்கு அன்பளித்தார்.

மெமோறியல் உள்ளவரை கொடைவள்ளல் “அரியம்மா”வின் நினைவு மானிப்பாய் மெமோறியல் சமூகம் நினைவு கூர்ந்து கொண்டு இருக்கும்.


நிறுவனர் தினம் (ஸ்தாபகர் நாள் - 12-06-1946)

1946 ஜூன் 12ல் (12-06-1946) மெமோறியல் தற்போதுள்ள இடத்திற்கு நிரந்தரமாக இடம்பெயர்ந்தது. இந்நாளையே பாடசாலையின் ஸ்தாபகர் நாளாக பாடசாலைச் சமூகம் இதுவரை கொண்டாடி வருகிறது..

திரு. அழகரத்தினம் அவர்களின் முழுநேரப்பணியால் மெமோறியல் புதுமெருகு பெற்றது. அவரின் பணியால் மெமோறியல் அக்காலத்தில் “அழகற்றை பாடசாலை” என்றே மக்களால் அழைக்கப்பட்டது என்பர்.

அதிபருடன் மெமோறியலின் வளர்ச்சிக்கு தோளோடு தோள்கொடுத்து நின்ற மெமோறியலின் முதலாவது கனிஸ்ட பிரிவு அதிபரான திரு ஆர்.சி.செல்லையா அவர்களையும் திரு.எஸ்பி.சபாரட்டிணம் அவர்களையும் நினைவு கூர்ந்தாக வேண்டும்.

திரு. அழகரத்தினம் அவர்கள் பாடசாலையை சிரேஸ்ட இடைநிலைப் பாடசாலையாக (
Senior Secondary School –SSC) தரமுயர்த்தவும் அதற்கான வசதிகளை செய்து தரவும் தனது சொந்த உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தார்.

அரையும் குறையுமாக அவசர அவசரமாக கட்டப்பட்ட தற்போதைய “அழகரத்தினம்” மண்டபத்திலேயே சிரேஸ்ட இடைநிலைப வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அத்தோடு தெற்கு எல்லையில் மேற்கு கிழக்காக எட்டு
(8) வகுப்புக்களைக் கொண்ட கிடுகு கொட்டிலான வகுப்பு மண்டபமும் அமைக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து அதே கிழக்கு எல்லையில் வடக்கு தெற்காக அரிவரி, முதலாம் வகுப்புக்களைக் முற்றாகக் கொண்ட தற்காலிக கொட்டிலொன்றும் அமைக்கப்பட்டது.

 

இந்த கட்டட வசதிகளுடன் மெமோறியல் இயங்கத் தொடங்கினாலும் மாணவர் விளையாட்டிற்காக பாடசாலையிலிருந்து சங்குவேலி உடுவில் பக்கமான வடகிழக்கிலிருந்த 1மைல் தூரத்திலுள்ள “தோரணக்கடவை” எனும் வெளிக்கு நடைபவனியாக ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிக்கும் விளையாட்டுப் பயிற்சிகளுக்கும் செல்ல வேண்டியிருந்தது.

இதனால்
1953ல் பாடசாலையின் வடக்கு எல்லையில் பழைய வீட்டுடன் இருந்த திரு றிச்சாட் ஜயாவின் காணியை பெறப்பட்டு விளையாட்டு மைதானமனக பயன்படுத்தப்பட்டது.. அந்த வீட்டைச்சுற்றி ஓடிய நிகழ்வை பழைய மாணவர் பலர் மறந்திருக்க மாட்டார்கள்.

அத்தோடு பாடசாலைக் அணிசேர்க்கும் விளையாட்டுத்திடலை அமைக்க வித்திட்ட திரு றிச்சாட் அவர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் மெமோறியல் சமூகம் என்றென்றும் நினைவு கூர்ந்து கொண்டு இருக்கும்.

 

The First  "Memorial"  Magazine -

 

முதலாவது "மெமோறியல்" பத்திரிக்கை

 

1954 மார்கழி மாதம் திரு. அழகரத்தினம் அவர்களின் காலத்திலேயே பாடசாலையின் ஆங்கிலம் தமிழ் கலந்த முதலாவது பத்திரிக்கையான The Memorial Magazine வெளிடப்பட்டது.

அதன் பத்திராபதியர்களாக

திரு சு.ஞானசம்பந்தனும், திரு.சின்னதம்பி அவர்களும் திகழ்திருந்தனர்.
 

 
 

பேஜ் மண்டம் - Page Block - 1960

1960ல் மெமோறியலின் ஸ்தாபகர் குடும்;பத்தினரால் ஆசிரியர் அறையும் 5வகுப்பு அறைகளையும் கொண்ட பேஜ் மண்டம் (Page Block) பாடசாலையின் வடக்கு எல்லையில் கிழக்கு மேற்காக அமைக்கப்பட்டது.

       

திரு.ஏ.அதிசயம் பேஜ் - Mr.A.A.Page

கொழும்பிலிருந்து பழையமாணவர் சங்கமும் பழைய மாணவர் கட்டிடகலைஞர் திரு.வி.எஸ்.துரைராஜாவும் ஒன்றிணைந்து காகில்ஸ் (Cargills Ltd) நிறுவன உரிமையாளர்களான மெமோறியலின் ஸ்தாபகர் குடும்பத்தின் பிரதிநிதி திரு.ஏ.அதிசயம் பேஜ் (Mr.A.A.Page) அவர்களின் உதவியுடன் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
 

 
மெமோறியல்  அரசாங்கம் பாடசாலை - ஜனவரி 1, 1961ல்
1961ல் இலங்கை அரசாங்கம் பாடசாலைகளை அரசாங்கப் பாடசாலைகள் ஆக்கும் திட்டத்தில் மெமோறியலும் தப்பவில்லை
 
மெமோறியலின் கீதம் - வாழ்க மெமோறியல் வாழிய.........


இன்றுவரை பாடப்பட்டுவரும் மெமோறியலின் கீதம்


“வாழ்க மெமோறியல் வாழிய வாழிய
வாழிய வேயென வாழ்த்திடுவோம்”
பாவலராய் நாவலராய் பாரினிலே மேலவராய் ……………………………………………


………..என்று தொடரும் மெமோறியலின் பாடசாலைக் கீதம் மானிப்பாய் பிரபல சங்கீத வித்துவான் உயர்திரு ஞானசம்பந்த குருக்கள். ஜயாக்கண்ணு தேசிகர் அவர்களால் இயற்றப்பட்டு

 “மத்தியமாவதி” இராகத்தில்ää “ஏகம்” தாளத்தில் அவராலேயே இசை அமைக்கப்பட்டு மாணவருக்கு பயிற்றப்பட்டு இன்றுவரை பாடப்பட்டு வருகிறது.

அவரே பாடசாலையின் பலவித சங்கீத நடன நிகழ்வுகளுக்கு குருவாக அதிபர் அழகரட்டிணம் அவர்களாலும் பின்வந்த அதிபர்களாலும் நியமிக்கப்பட்டிருந்தார்.

 

அவரின் மூத்த புதல்வி. செல்வி. ஜயாக்கண்ணு தேசிகர் சிவரஞ்சனி மெமோறியலின் புகழ்பூத்த மாணவியும் ஆவார்.

.

1961 – 1964

Manipay Memorial English School  

Mr.J.V.Thambynayagam    

திரு.ஜே.வி.தம்பிநாயகம்.

    மெமோறியலுக்கு அளப்பரிய சேவையாற்றிய திரு. அழகரத்தினம் அவர்கள் அரசாங்கத்திடம் மெமோறியலை கையளித்த கையோடு 1961 மாசி மாதம் அதிபர் திரு ஜே.வி.தம்பிநாயகம்   அவர்களிடம் மெமோறியலைக் கையளித்து ஓய்வு பெற்றார்.

    இவ் இரு நிகழ்விற்கும் உத்தியோக பூர்வமாகவும் சமய சம்பிராதய ஆத்மீக சிறப்பு கௌரவிப்பாகவும் தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண வண.ஆயர்.திரு.குலேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தமை திரு.அழகரத்தினம் அவர்களின் சேவையின் மதிப்பை யாவரும் உணர முடியும்.
     அதிபர்.திரு.ஜே.வி.தம்பிநாயகம் அவர்கள் காலத்தில்தான் அகில இலங்கைரீதியாக பெரும்பாலான பாடசாலைகளை அரசாங்கம் பாரமெடுத்தபோது எமது பாடசாலையும் ஜனவரி 1, 1961லிருந்து அரசாங்கப் பாடசாலையாயிற்று.

இவர் காலத்திலேயே செப்ரெம்பர் 1964ல் பாடசாலையில் இந்து அபிவிருத்திச்சங்கம் உருவாக்கப்பட்டது. 1964 இறுதிவரை மிகச் சிறப்பாக பாடசாலைபை இவர் கொண்டு நடாத்தினார்.

மீண்டும் சாவகச்சேரி டிபேக் கல்லூரி இவர் சேவையை கேட்டுக் கொண்டதிற்கிணங்க மாற்றலாகிச் சென்றார்.

 

1964 – 1966

Manipay Memorial English School       

Mr.J.M.G.Samuel                     

திரு.ஜே.எம்.ஜீ.சமூவேல்

அதிபர்.திரு.ஜே.எம்.ஜி.சமூவேல் அவர்கள் பாடசாலையை 1964இறுதியில் பொறுப்பேற்று 1966வரை வழிநடாத்தினார்.

இவரது காலத்தில் மெமோறியலின் சாரண இயக்கக்குழு அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்றது.

 

1966 – 1970

Manipay Memorial English School

Mr.V.H.Sampanthar                

திரு.வீ.ஏச்.சம்பந்தா்

அதிபர்.திரு.வி.ஏச்.சம்பந்தர் அவர்கள் 1966ல் பொறுப்பேற்றார். திருமதி சம்பந்தர் அவர்களும் எமது கல்லூரியில் சமகாலத்தில் கடமையாற்றினார்.

கல்லூரியின்
 "Memorial" “மெமோறியல்” இரண்டாவது வெளியீடு

ஜூன் 28, 1967ல் வெளியிடப்பட்டது.

 

பத்திராபதியர்களாக ஆங்கிலப் பகுதிக்கு திரு.பீ.ஆர்.அரியபூசணம் அவர்களும், திருமதி.ஏ.ஆர்.ஜெயநாயகம் அவர்களும்,

 

தமிழ்ப் பிரிவுக்கு பண்டிதர்.திரு.எம்.கதிரவேற்பிள்ளை அவர்களும் திருமதி.கே.நடராஜா அவர்களும் இருந்துள்ளார்கள்.

 

 
இராணிச்சாரணர்களQueen's Scouts
1967ல் பாடசாலையினது வரலாற்றில் மட்டுமன்றி வலிகாமம் கல்வி வலயத்திலிருந்து முதல் முதலாக மெமோறியலின் சாரண இயக்கத்திலிருந்து இராணிச்சாரணர்கள்  உருவானார்கள்.
          

பழைய மாணவர் சங்க தலைவர் திரு.க.கமலசேகரம் அவர்களில் ஒருவர் ஆவார்.

இவர்களுக்குரிய இராணிச்சாரணர் சின்னம் அப்போதைய கவர்னர் ஜெனரல் வில்லியம் கோபல்லாவ அவர்களால் கண்டி தலதாமாளிகையில் வைத்து சூட்டப்பட்டது.

அந்த வைபவத்திற்கு அதிபர், சாரண பொறுப்பாசிரியர் ஏனைய சாரணர்களும் கண்டி தலதாமாளிகையில் அழைத்து கௌரவிக்கப்பட்டனர்.

 
மெமோறியல் நடேசர் ஆலயம் - Memorial Nadesar Temple
1968ல் அழகரத்தினம் மண்டபத்தின் வடக்கு பகுதி முடிவில் மானிப்பாய் மெமோறியல் பாடசாலை இந்து சங்கம் நடேசர் ஆலயத்தை கட்டிமுடித்தது.

சைவ, கிறிஸ்தவ ஆசிரியர்கள் மாணவர்கள் ஒன்றிணைத்து இவ் ஆலயத்தை  கட்டுவித்திருந்தனர். அப்போது திரு.க.கமலசேகரம் அவர்கள் மெமோறியல் பாடசாலை இந்து சங்க மாணவ தலைவராயிருந்தார்;.

 

1971

Manipay Memorial English School

Mr.W.G.Annappah                     

திரு.டபிள்யூ.ஜீ.அன்னப்பா

திரு.வி.ஏச்.சம்பந்தர் அவர்கள் 1970ல் ஓய்வு பெற பாடசாலையின் சகல துறைகளிலும் ஆசிரியராயிருந்து தடம் பதித்த மெமோறியல் சமூகத்தின் இன்றும் மதிப்புக்குரிய திரு டபிள்யூ.ஞானசிகாமணி.அன்னப்பா அவர்கள் 1971ல் பதில் அதிபர் பதவியை ஏற்றார்.
 

1971 – 1975

Manipay Memorial English School

Mr.K.Kailayanathan            

திரு.கைலாயநாதன்

1971லிருந்து 1975வரை அதிபர்.திரு.கே.கைலாயநாதன் கடமை ஏற்றார்.

இவரது 4வருட காலத்தில் சொல்லக்கூடியளவு முன்னேற்றங்கள் காணப்பட்டன.

1972லும் 1973லும்  பரிசளிப்பு விழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெற்று மாணவ மாணவியர் ஊக்கப்படுத்தப்பட்டனர்.

 

1975 – 1978

Manipay Memorial English School

Mr.K.Vaithiyanatha Samra           

திரு.கே.வைத்தியநாத சா்மா

அதிபர் திரு.கே.வைத்தியநாத சர்மா அவர்கள் 1975ல் பாடசாலையை பொறுப்பேற்று 1978 வரை மூன்று வருடங்கள் பாடசாலை வளர்ச்சியை குறைவற கொண்டு சென்றார்.


இவரது காலத்தில் 1975ல் புகழ்பூத்த பழைய மாணவர் கட்டடகலை நிபுணர் வீ.எஸ்.துரைராஜா அவர்களின் அன்பளிப்பாக பாலர் பிரிவுக்கான நிரந்தர கட்டடம் பாடசாலையின் கிழக்கு எல்லையில் அமைக்கப்பட்டது.

 

1978 – 1980

Manipay Memorial English School

Mrs.P.Sivanantharajah        

திருமதி. பீ. சிவானந்தராசா

1978லிருந்து 1980வரை அதிபர்.திருமதி.பீ.சிவானந்தராஜன் அவர்களின் நிருவாகத்தில் 3வருடங்கள் பாடசாலை சிறப்புக்கள் பெற்றது.

பாடசாலையின் முதலாவது பெண் அதிபர் என்ற பெருமையை பெற்றவர்..

இவரால் 1978ல் 9மாணவர்களுடன் க.பொ.த உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது.

 

1980 – 1983

Manipay Memorial English School

Mr.V.Suntharathas                

திரு.வீ. சுந்தரதாஸ்

அதிபர்.வீ.சுந்தரதாஸ் அவர்களின் சேவை மெமோறியலின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியத. 1980பதிலிருந்து 1983வரை 4வருடங்கள் கல்லூரிக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.

இவரது காலத்தில் 1980ம்ஆண்டு மெமோறியலிருந்து முதன் முதலாக பல்கலைக்கழகத்திற்கு செல்வி.எஸ்.ஸ்ரீபவானி தெரிவானர். இவரை தொடர்ந்து பலர் இன்றுவரை பல்கலைக்கழகத்துக்குள் நுழைகின்றனர்.

கொழும்பில் 1980ல் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான 200மீற்றர் ஓட்ப்போட்டியில் செல்வன்.எஸ்.சிவபாதம் இடம் பிடித்தார். இதேகாலத்தில் உதை பந்தாட்டத்திலும் மாவட்டரீதியிலும் பாடசாலை முதலிடம் பிடித்தது.

1981லிருந்து க.பொ.த உயர்தர மாணவர் உணவு விருந்து உபசார வைபம் தொடங்கப்பட்டு இன்றுவரை தொடர்கிறது.

இவரது சிறந்த வழிகாட்டலில் 1982ல் நடந்த ஏறக்குறைய 52 பாடசாலைகள் பங்கு பற்றிய மாவட்டரீதியான உடல் பயிற்சிப் போட்டியில் மெமோறியலின் நான்கு வயதுப் பிரிவுகளும் முதலிடம் பெற்றமை பாராட்டுக்குரியது.

அதிபர்.திரு.வீ.சுந்தரதாஸ் அவர்களின் துணைவியாரும் மெமோறியலின் புகழ்பூத்த ஆசிரியை என்பதோடு இறுதியாக அவர் கல்வி அதிகாரியாக உயர்வு பெற்றிருந்தார்.

குடும்பத்துடன் ஓய்வின்பின் கனடா சென்று அங்கும் பழைய மாணசர் சங்கத்தை அமைத்து பாடசாலைக்கு பலவித உதவிகளை செய்து வந்ததோடு பாடசாலையின் முகப்பில் அமைந்துள்ள இருமாடிக் கட்டடம் அவரின் குடும்பத்தினரால் அமைத்துக் கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 
 

1983 – 1989

Manipay Memorial English School

Mr.V.Ponnudurai            

திரு.வீ. பொன்னுத்துரை

அதிபர்.திரு.வீ.பொன்னுத்துரை அவர்கள் 1983லிருந்து 1989வரை 6வருடகாலம் பாடசாலையின் வளர்ச்சியில் இன்னொரு பக்கமாகக் கொள்ளலாம்.

பாடசாலையின் முகப்பில் அமைந்துள்ள சுந்தரதாஸ் இருமாடிக் கட்டடம் 1985ல் இவரால் கட்டி முடிக்கப்பட்டது.

1986ல் மெமோறியலின் 150ம் வருட நிறைவு இவரால் ஜூன்; 12ää 1886லிருந்து ஜூலை 5ää 1886வரை மிகச்சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது.

கல்லூரியின் “மெமோறியல்” மூன்றாவது வெளியீடும் மிகச்சிறப்பாக மெமோறியலின் 150வருட நிறைவை ஆவணப்படுத்தித் தொகுக்கப்பட்டிருந்தது.

இதேவருடம் 1986ல் அகில இலங்கை ரீதியான உடல்பயிற்சிப் போட்டியில் 19வயதுக்கு உட்பட்ட பிரிவு மாவட்டரீதியில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.

 

 

1989 – 1996

1998 – 1999

2000 – 2004

Manipay Memorial English School

Mr.A.M.Arusasalam                 

திரு.ஏ.எம்.அருணாசலம்

மெமோறியலின் வரலாற்றில் “மெமோறியலின் தந்தை அழகரத்pனம்” அவர்களின் பின்னர் பாடசாலையின் தற்போதைய சகலதுறை வளர்ச்சிக்கும் வித்திட்டவர் திரு.அ.மு.அருணாசலம் அவர்கள்.

மெமோறியலின் பழையமாணவர், ஆசிரியர், உபஅதிபர் என்கின்ற வகிபாகங்களுடன் இறுதியாக ஏறக்குறைய
1989லிருந்து 2004வரை 15வருடகாலம் மெமோறியலின் அதிபர் பொறுப்பிலிருந்து சேவையாற்றியுள்ளார்.

அதிபர் திரு அழகரத்தினம் அவர்களின் பின்னர் நீண்டகால அதிபர் பொறுப்பிலிருந்த திரு.அ.மு.அருணாசலம் அவர்கள் காலத்தில் 1999ல் பாடசாலை அபிவிருத்திச்சபை பழைய மாணவர் சங்க உதவிகளுடன் படசாலைக்கு
4பரப்பு காணி வாங்கப்பட்டது.


இவரது காலத்தில் 2001ல் பாடசாலையின் நிலப்பரப்பு கூடியமைக்கு அதிபரின் ஊக்கத்துடன் பாடசாலை அபிவிருத்திச்சபை பழைய மாணவர் சங்க உதவிகளுடன்; குறிப்பாக சிறப்பாக சுவிஸில் வதியும் பழைய மாணவர் திரு மகாராஜா மாகாவேந்தன் அவர்களின் மிகப்பெரிய பங்களிப்பு பாராட்டத்தக்கது.

அத்தோடு பாடசாலையின் கிழக்கு மூலையில் அமைந்துள்ள கீழ்பிரிவு வகுப்புக்களின் மாடிக் கட்டடத் தொகுதியின் முதற்பகுதி மெமோறியலின் முன்னாள் ஆசிரியர் பொன்னையாநாதன் அவர்களின் பேரனும், சட்டத்தரணி அமரர் காராளசிங்கத்தின் மகன் திரு.காராளசிங்கம். இந்திரன் அவர்களால் கட்டித் தொடக்கி வைக்கப்பட்டதாகும். மிகுதி கட்டடத் தொகுதி அரசää அரசசார்பற்ற நிறுவனங்களால் அதிபரின் முயற்சியால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று பாடசாலையின் பல வேலைத்திட்டங்களை மானிப்பாய் கல்விச்சமூகம், நன்கொடையாளர்கள், வெளிநாட்டு உள்நாட்டு பழைய மாணவர்களின் அனுசரணைகளுடன் அதிபர் திரு.அ.மு.அருணாசலம் அவர்கள் நிறைவேற்றி மெமோறியலை வளம்படுத்தியுள்ளார்.

பாடசாலையின் தெற்குக்கான இரண்டு மாடிக் கட்டடமும் இவர்காலத்தில் அத்திவாரமிடப்பட்டதுதான்.

மிகநீண்டகாலத்திற்கு நாட்டின் மிகக்குழப்பான காலத்தில்
15வருடங்கள் அதிபராயிருந்து மெமோறியலின் வரலாற்றில் மறக்கமுடியாத சேவையாளரான பழைய மாணவரான திரு.அ.மு.அருணாசலம் அவர்கள் இன்றும் எம்மத்தியிலிருந்து பழைய மாணவர் சங்கத்தை வழிநடாத்தி மெமோறியலின் 183ம் நிறைவையும் அதன் வளர்ச்சியையும் சிறப்பித்து வருகிறார்.
 

 

1996 – 1998

1999 – 2000

Manipay Memorial English School

Mrs.C Yogeswaran       .          

திருமதி.சீ.யோகேஸ்வரன்

திரு.அ.மு.அருணாசலம் அவர்களின் காலத்தில் ஆசிரியராகää உபஅதியராக பதில்அதிபராக கடமையாற்றிய திருமதி.சீ.யோகேஸ்வரன் அவர்கள் 1996லிருந்து 1998வரையும் பின்னர் 1999லிருந்து 2000வரையும் அதிபராக கடமையாற்றினார்.
 
திருமதி.சீ.யோகேஸ்வரன் அவர்கள் காலத்தல்
1998ல் மதிப்புக்குரிய திரு டபிள்யூ.ஞானசிகாமணி.அன்னப்பா அவர்களின் பெயரால் பாடசாலையினுள் குடும்பத்தினர் உதவியுடன் அன்னப்பா ஞாபக நூலகம் திறக்கப்பட்டு இன்றும் சிறப்பாக இயங்கி வருகிறது.
 

2004–2010

Manipay Memorial English School

Mrs.Venuka Shanmugaratnam

திருமதி. வேணுகா சண்முகரத்தினம்

தற்போதைய யாழ் வேம்படி அதிபராயிருக்கும் திருமதி.வீ.சண்முகரட்ணம் அவர்கள் 2004லிருந்து 2010வரையிலான காலப்பகுதியில் மெமோறியலின் அதிபராயிருந்தார்.
 
நாட்டின் குழப்பங்கள் ஓரளவு தணிந்திருந்த காலத்தில் திரு.அ.மு.அருணாசலம் தொடக்கிவிட்டிருந்த செயற்பாடுகளை முன்னெடுத்து நிறைவேற்றியதோடு பாடசாலை வளர்ச்சியையும் தொய்யவிடாடு வழிநடாத்திச் சென்றார்.
 

2011–2013

Manipay Memorial English School

Mr.N.Sivakadachcham        

திரு.N.சிவகடாச்சம்

அதிபர் திரு.என்.சிவகடாச்சம் 2011லிருந்து 2013வரையிலான காலப்பகுதியில் அதிபராயிருந்து ஓய்வு பெற்றார்.

அவரும் பாடசாலை வளர்ச்சியில் தம்மாலியன்ற வளர்சியை வளர்த்தெடுத்து வழிநடாத்திச் சென்றார்.

 

2013

Manipay Memorial English School

Mr.P.Jeyaweerasingham        

திரு.பீ.ஜெயவீரசிங்கம்

ஆசிரியராக உபஅதிபராக பதில் அதிபராக கடமையாற்றிய திரு.பீ.ஜெயவீரசிங்கம் அவர்களை மெமோறியல் சமூகம் மறந்துவிடமுடியாது. மெமோறியலில் 1989லிருந்து கடமையேற்று தொடர்ச்சியாக 25வருடங்கள் கடமையாற்றி ஒக்டோபர் 2014லுடன் ஓய்வுபெற்ற இவரின் மெமோறியலுக்கான பங்களிப்பு அளவிட முடியாதது.

அதிபர் திரு.பொன்னுத்துரை அவர்களின் காலத்திலிருந்து அதிபர் திரு மாதவன். காலம்வரை தொடர்ச்சியாக
25வருடங்கள் அதிபர்கள் மாறவும் அந்த இடைக்காலங்களில் அதிபர்கள் இல்லாதிருந்த போது அவர்களின் கடமைகளை விட்ட குறைநிறைகளை செய்து முடித்து மெமோறியலின் சிறப்பை வளர்ச்சியை கட்டிக்காத்தவர் திரு.பீ.ஜெயவீரசிங்கம் அவர்களாகும்.
 

2013–2015

Manipay Memorial English School

Mr.T.Mathavan 

திரு.ரீ.மாதவன்

அதிபர் திரு.ரீ.மாதவன் அவர்களின் 2013 - 2015காலத்தில் மாணவர் கல்வி விளையாட்டுத்துறை குறைவில்லாமல் நடந்துள்ளது. மாணவர்கள் எறிபந்து குழு மாவட்ட ரீதியில் முதலிடம்பெற்று பாடசாலைக்கு பெயரீட்டியது
 

2015.09.01 - up to date

Manipay Memorial English School

Mr.A.Perinpanayagam                  

திரு.ஆ.பேரின்பநாயகம்

செப்ரம்பர் 2015 கடமையேற்றிருக்கும் திரு.ஆ.பேரின்பநாயகம் அவர்கள் மெமோறியலின் 180ம் வருட நிறைவு காலத்தில் மிக உற்சாகத்தோடு தமது முன்னைய பட்டறிவோடு செயலாற்றத் தலைப்பட்டுள்ளார். அவரின் ஆரம்ப செயற்பாடுகளே மெமோறியலின் வளர்ச்சியை மிக உச்சத்திற்கு கொண்டு செல்லுமென மெமோறியல் சமூகம் நம்புகிறது.

மெமோறியல் சமூகத்திடப் பழையமாணவர்களிடம் அவர் முதலிலேயே சில விண்ணப்பங்களை விடுத்திருந்தார்.

பாடசாலையின் தோற்றத்தை அழகுபடுத்துவதற்கான முதல்கட்ட முயற்சியில் ஓரளவுக்கு வெற்றி எய்தியுள்ளமை இன்றைய பாடசாலையின் தோற்றம் எமக்கு காணும்போது தெம்பூட்டுகிறது.

ஆரம்பப்பிரிவு வண்ணமூட்டி அழகுபடுத்தப்படவேண்டுமென்ற கோரிக்கையும் பிரதான மண்டபம் அழகரட்டிணம் மண்டப திருத்தமும் அவரின் முயற்சியால் கைகூடியுள்ளதைக் காணக்கூடியதாயுள்ளது.

 
நீர் வழங்கல், மின் இணைப்புக்கள் மைதான தான திருத்தங்கள், கிழக்கெல்லை மதில் அமைப்பு, வகுப்பறைகள் தளபாடங்கள், ஆசிரியர் அறை வசதிகள், அலுமாரிகளின் தேவைகள், கணனிகூடத்தின் தேவைகள் ஆகிய இன்னோரன்ன தேவைகள் இருந்து கொண்டுதானிருக்கின்றன.

வறிய மாணசரின் கல்வி வளர்ச்சிக்கான உதவிகள் காவளாளிகளின், துப்பரவு தொழிலாளிகளின் வசதிகள் மெமோறியல் சமூகத்திடமும் பழைய மாணவர்
களிடமும் எதிர்பார்க்கப்படுகின்றது.
 
ஆசிரியர் தினம் ஒக்டோபரில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

 
பழைய மாணவர் சங்கமும் சிறப்பாக நடைபெற்றது. எமது புகழ் பூத்த பழைய மாணவர் வலயக் கல்விப்பணிப்பாளரும் கலந்து சிறப்பித்ததோடு எமது மூத்த பழையமாணவர்ää நீண்டகால மெமோறியலின் அதிபர்ää முன்னாள் ப.மா.சங்க தலைவர் திரு.அ.மு.அருணாசலம் அவர்களும் கௌரவிககப்பட்டார்.
 
பாடசாலையின் ஒளிவிழாää முதலாம் தவணை அறிக்கை பெற்றோருடன் அளித்தல்ää விளையாட்டுப்போட்டி என்பனவும் சிறப்பாக நடந்தேறியுள்ளன.

 

வருடாந்த விளையாட்டுப்போட்டி 2016
 

மெமோறியல் சமூகமும் பழையமாணவர்களும் உறுதுணையாக இருப்பாளென மெமோறியல் அன்னை அருள்புரிய வேண்டுமென வேண்டுகிறோம்.

 

மெமோறியல் அன்னை அதிபர் திரு.ஆ.பேரின்பநாயகம் அவர்களுக்கு சகல உடல் உள சௌபாக்கியங்களை நல்கி அவரின் செயற்பாடுகளுக்கு மெமோறியல் சமூகமும் பழையமாணவர்களும் உறுதுணையாக இருப்பாளென மெமோறியல் அன்னை அருள்புரிய வேண்டுமென வேண்டுகிறோம்.