சுவாமி ஞானப்பிரகாசர்- Swamy Gnanapiragasar

 

Kamalam

Kamal

Families

Friends

Guiders

School

Jobs

கமலம்

கமல்

குடும்பம்

நண்பர்

வழிகாட்டி

பாடசாலை

தொழில்

 

 

Home

 

Jaffna

Valikamam

Vadamarachchy

Thenmarachchy

Islands

Northern Province

About

முகப்பு

 

யாழ்ப்பாணம்

வலிகாமம்

வடமாராட்சி

தென்மாராட்சி

தீவுகள்

வடமாகாணம்

நாங்கள்

 

சுவாமி ஞானப்பிரகாசர்- Swamy Gnanapiragasar

 

திருமறைக் குரவர்

சிறந்த எழுத்தாளர்

ஒப்பற்ற பிரசங்கியார்

கீர்த்திவாய்ந்த பேச்சாளர்

பன்மொழி விற்பன்னர்

சரித்திர ஆராய்ச்சி அறிஞர்

சொல்லாராய்ச்சி வல்லுநர்

  

 

 

 

 

 

 

 

 

 

சுவாமி ஞானப்பிரகாசர்

சுவாமி ஞானப்பிரகாசர் தமிழ் ஆராய்ச்சியிலும், வரலாற்று ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு உழைத்தார். அறிவும், ஆற்றலும், சிந்தனைத் தெளிவும் அவரது ஆராய்ச்சியில் மிளிர்வதை அறிஞர்கள்

உணருவர்.

 

தமிழ் மொழிக்கும், கிறிஸ்துவ சமயத்திற்கும் ஈடில்லாச் செவை புரிந்தவர். கிறிஸ்வத்துடன் தமிழியும் வளர்த்தார். தமிழ் அவரால் வளர்ந்தது, சிறப்புற்றது, புதுப்பொலிவுற்றது.

 

சுவாமி ஞானப்பரகாசர், வரலாறு, அரசியல், மானிடவியல், சமூகவியல், எழுத்துமுறை, சொல்லொற்றுமை, இடப்பொயர்கள், சமய வரலாறு, சமய வழிபாடுகள், பழக்க வழக்கங்கள் முதலியவற்றினை அடிப்படையாகக் கொண்டு தமது ஆராய்ச்சியினை மேற்கொண்டார்.

 

சுவாமி ஞானப்பிரகாசர், மொழியின் வரம்பாக மட்டுமே இருந்த இலக்கண உலகை ஆராய்ச்சி உலகாக மாற்றியமைத்தவர்.

 

மண்ணோடு மண்ணாகப் புதையுண்டு கிடந்த திராவிட நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் என அனைத்தையும் தமது ஆய்வு நூல்கள் மூலம் அகிலத்துக்கு வெளிப்படுத்தியவர் சுவாமி ஞானப்பிரகாசர்.

 

கத்தோலிக்க தேவாலயங்களில் தமிழில் செபம் செய்தல் வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்ட போது, செபங்களை தமிழில் மொழிபெயர்த்து அளித்தவர் சுவாமி ஞானப்பிரகாசர்.

 

ஞானப்பிரகாசரின் அவதாரம்

இலங்கையின் வடமகாணத்தில் யாழ்ப்பாணம், மானிப்பாயில்  யாழ்பாண மன்னர் பரம்பரைகளுக்குள் ஆறாவது பரராசசேகரனின் பரம்பரையில் வந்த வேலக்கைப் பிள்ளையார் கோவில் பரிபாலகராகவும் இருந்த ஆசிரியர் இராசசிங்கம் சுவாமிநாதபிள்ளை அவர்கள் மானிப்பாய்யில் வாழ்ந்த காடினர் சிற்றம்பலத்தின் புதல்வி தங்கமுத்துப்பிள்ளையைத் திருமணம் செய்திருந்தார்.

 

இவர்களுக்கு 1875 ஓகஸ்ட் 30 (30.08.1875)ல் ஒர் ஆண் குழந்தை பிறந்தது.

சுவாமிநாதபிள்ளை தமது குழந்தைக்கு வைத்திலிங்கம் என்னும் பெயர் சூட்டினார், குழந்தையின் குடும்பத்தினர் கனகரத்தினம் என்னும் செல்லப் பெயரால் அக்குழந்தையை அழைத்தனர்.

 

வளர்ப்பு

வைத்திலிங்கம் என்னும் கனகரத்தினம் ஒரு வயதுப் பிள்ளையாக இருந்தபோது தந்தையார் சுவாமிநாதபிள்ளை அவர்கள் வாந்திபேதி நோயால் காலமானார்.

சுவாமிநாதபிள்ளை அவர்கள் காலஞ் சென்றதனால் உறவினர் குழந்தையின் இளம்  தாயாராகிய தங்கமுத்துப்பிள்ளையை அச்சுவேலியைச் சேர்ந்த செந்தமிழ்ப் புலவர் தம்பிமுத்துப்பிள்ளை அவர்களுக்கு மறுமணம் செய்து வைத்தனர்.

 

தம்பிமுத்துப்பிள்ளை கத்தோலிக்க மதத்தினராதலினால் தாயாருடன் வைத்திலிங்கமும் கத்தோலிக்க மதத்திற் சேர்ந்து கத்தோலிக்கத் திருச்சபையுடன் இணைந்து கத்தோலிக்கராக ஞானப்பிரகாசம் என்னும் பெயரால் ஞானஸ்நானம் செய்யப்பட்டார்.

 

தாயாரின் மறுமணத்தின்பின் அச்சுவேலியில் வசிக்க நேரிட்டதால் சிறிய தந்தையாராகிய தம்பி முத்துப்பிள்ளையின் அன்பான வளர்ப்பில் அச்சுவேலியில் வாழ்ந்தும் வந்தார்.

 

 

கல்வி

அச்சுவேலி சூசையப்பர் திண்ணைப் பள்ளிக்கூடம்

மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலை

யாழ்ப்பாண சம்பத்தரிசியார் கல்லூரி

 

ஆரம்ப கல்வியை அச்சுவேலி சூசையப்பர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தொடங்கினார்.  சிறுவயதிலேயே இவருடையே வளர்ப்புத் தந்தையான செந்தமிழ்ப் புலவர் தம்பிமுத்துப்பிள்ளையிடம் தமிழ்ச் செய்யுள், தமிழக வரலாறு, தமிழ் இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். 

 

ஞானபிரகாசத்துக்கு 11வயதாயிருக்கும் போது ஆங்கிலக் கல்வி பெறுவதற்காக தாயாரின் ஊரான மானிப்பாயில் அன்று பிரபலியமாயிருந்த பேஜ் பாடசாலை என்று அழைக்கப்பட்ட மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலையில் இணைந்து கொண்டார். அக்காலத்தில் மெமோறியல் பாடசாலையின் ஸ்தாபகர் குடும்பத்தினரான திரு.வைரவநாதர் பேஜ் (1872-1889) அவர்கள் தலைமை ஆசிரியராக இருந்திருக்கிறார்.

 

ஞனப்பிரகாசம் மெமோறியல் பாடசாலையின் கல்வி வாழ்வைவின் சுவையான நிகழ்வுகள் பற்றி  அவரது மைத்துனருக்கு எழுதிய கடிதமூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

 

பதினொரு வயதளவில் எனது ஜனன ஊரான மானிப்பாயில் பிறந்த மனையிலே என் தந்தையாரின் சகோதரிமாருடைய ஆதரவில் இருந்துகொண்டு எனது தந்தை கற்ற மானிப்பாய் மெமோறியல் பாடசாலைக்கே ஆங்கிலத்தில் படிக்க அனுப்பப்பட்டேன். அப்போது சிறிய தந்தையார் எனக்கு வீட்டிலிருந்த அதியுயர்ந்த விலைபெற்ற பட்டுத்துணிகளை உடுத்தி அனுப்பியது மட்டுமன்றி தமது வைரக் கணையாளியையும் அணிவித்து பாடசாலைக்கு அனுப்பியிருந்தார். அது அளவில்லாது தளதளத்துக் கொண்டிருந்தமையால் பின்னொருநாள் கைக்கு அளவான விசித்திரமான வேலைப்பாடுகளுடைய வேறொரு  மோதிரத்தை வாங்கி அணிவித்து அனுப்பினார்.

 

இவ்வாறான அன்பு பட்சத்தின் அடையாளங்களே சிறுவர் மனதைவிட்டு அகலாது மனதில் பதிந்து கொள்ளுமாதலால் இன்றைக்கும் இதுபோன்ற பல அன்பின் செயல்கள் எனது மனதில் இருக்கின்றன. மானிப்பாய் பள்ளிக்கூடம் அக்காலத்தில் அமெரிக்கன் புரொட்டஸ்தாந்து மினோடு சம்பந்தப் பட்டிருந்நது. மாணாக்கர்கள் சுவிசேச வாக்கியங்களை வாய்ப்பாடமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் ஓய்வுநாள் பாடசாலைக்கு செல்லவேண்டும் என்பதும் பாடசாலையின் ஒழுங்குகள் ஆகும். சிறிய தந்தையார் புதுச்சேரியில் பதிப்பித்த சத்திய வேத  சுவிசேசமொன்றை வாங்கித்தந்து அதிலிருந்தே பாடம்கொடுக்கும்படி செய்திருந்தார். என்றவாறாக எழுதியிருந்தமை அவரின் வாழ்க்கைக் குறிப்புக்களிலிருந்து காணக் கூடியதாயிருக்கிறது.

 

மெமோறியல் பாடசாலையின்  ஆங்கிலக் கல்வியைத் தொடர்ந்து உயர்கல்விக்காக யாழ்ப்பாண சம்பத்தரிசியார் கல்லூரியில் இணைந்து பதினேழு வயதுவரை கல்வியைத் தொடர்ந்தார். மானிப்பாயிலும் ஆரம்பக் கல்வி பயின்ற ஞானப்பிரகாசம், பின்னர் யாழ்ப்பாணத்துச் சம்பத்திரிசியார் கல்லூரியில் கல்வி பயின்று கல்வியை முடித்துக் கொண்டு சிறிய தந்தையாருடனேயே சென்று அச்சுவேலியில் வாழ்ந்து வந்தார்.

 

இக் காலத்தில் சிறிய தந்தையார் திரு.தம்பிமுத்துப்பிள்ளை அவர்கள் தனது பெறாமகனுக்கு அச்சுத் தொழிலைப் பழக்கியதோடு சங்கீதத்தில் வயலின் வாசிக்கவும் மத்தளம் அடிக்கவும் வசதி செய்து கொடுத்தார். பிரம்மஸ்ரீ .சபாபதிக் குருக்களிடம் சமஸ்கிருதம் படிக்கவும் ஒழுங்கு செய்து கொடுத்தார். இவைகளினால் ஞானப்பிரகாசம் கத்தோலிக்க வேத கீர்த்தனைகளை இனிமையாகப் பாடக் கற்றுக் கொண்டார்.

 

தம்பிமுத்துப்பிள்ளை அவர்கள் தமது அச்சகத்தில் *சன்மார்க்க போதினி என்னும் சஞ்சிகை ஒன்றை வெளியிட்டு வந்ததினுல் ஞானப்பிரகாசமும் எழுத்துத்துறையில் வளர்ச்சி அடைய உதவியாக இருந்தது. இதனால் சிறிய தந்தையார் புலவர் தம்பிமுத்துப்பிள்ளையின் செய்யுள் இயற்றும் வன்மையும் அவருக்கு பரம்பரைச் சொத்தாகக் கிடைக்கக் கூடியதாகவிருந்தது.

 

இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போது லண்டனில் இருந்து வெளிவந்த " POETRY LONDON " என்ற ஆங்கிலக் கவிதைச் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து பல ஆங்கிலக்கட்டுரைகளை ஊக்குவித்த கவிஞர் தம்பிமுத்து (MEARY JAMES THURAIRAJAH) என்பவர் ஞானப்பிரகாசரின் தாய் வயிற்றில் தம்பிமுத்துவுக்குப் பிறந்த பிள்ளைகளில் ஒருவரான ஹென்றி தம்பிமுத்துவின் மகன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

தொழில்

பாடசாலை கல்வியை நிறைவு செய்து கொண் ஞானப்பிரகாசத்துக்கு பதினெட்டு வயது நடக்கும் சிறிது காலம் போது நாவலப்பிட்டியில் அவரது தாய்மாமனுடன் இருந்த சிறிது காலம் நானு ஓயா தேயிலைத் தோட்டத்தில் கணக்கு எழுதுபவராக வேலை செய்ய நேரிட்டது.

 

அக்காலத்தில் 1893 ஆம் ஆண்டில் அவர் றெயில்வே கிளறிக்கல் பரீட்சையில் முதற்தரமாகச் சித்தியடைந்ததினுல் கடிகமுவ என்னும் இடத்தில் ஸ்ரேசன் மாஸ்ரருக்கு உதவியாளராக நியமனம் பெற்றார்..

அவரது வேலைத் திறனைக் கண்ட மேலதிகாரி ஒருவரால் கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலத்தில் வேலை செய்ய அனுப்பப்பெற்றார். மோஸ் கோட் மூலம் விரைவாகச் செய்தி அனுப்புவதில் வல்லவராக இருந்தார்.,

 

துறவியாதல்

தம்பிமுத்துப்பிள்ளையின் ஒன்று விட்ட சகோதரராகிய வண. அந்தோனி சுவாமியார் அவர்கள் ஞானப்பிரகாசம் ஒரு குருவாக வர வேண்டும் என்னும் ஆவல் கொண்டிருந்தார். தனது எண்ணத்தை யாழ். மாட்டீன் குருமடத்தில் இருந்த அதி வண. யூல்ஸ் கொலின் சுவாமியாருக்குக் கடிதமூலம் தெரிவித்துக் கொண்டிருந்தார்.

 

சிறியதந்தையாருக்கு உதவி செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த ஞானப்பிரகரசம், கொலின் சுவாமியாருடைய புத்தி மதியைக் கேட்டு குருவாக வர ஒப்புக்கொண்டார். எனினும் சிறிய தந்தையார் விரும்பாததினுல் மனம் சோர்ந்து சிறிய தந்தையாருடன் அவரது அச்சகத்தில் வேலைசெய்து அவருக்கு உதவியாக இருக்க எண்ணினார்.

ஆனல் யூல்ஸ் கொலின் சுவாமியாருடைய சகோதரன் சாள்ஸ் கொலின் சுவாமியாருடைய புத்திமதியால் மனம் மாறி குருமடத்துக்குப் போகத் தீர்மானித்தார்.

 

இதன்பின்பும் சிறிய தந்தையாரின் துயரத்தைக் காணமுடியாதவராய் குருமடத்துக்குப் போவதில்லை என்று தீர்மானித்தாரெனினும் கொலின் சுவாமியாரின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணம் சென்றவர், மேற்றிராணியாரின் ஆலோசனைப்படி துறவியாவதற்கு யாழ்ப்பாண கத்தோலிக்க திருச்சபை குருமடத்தில் இணைந்த கொண்டார்.

 

சிறிய தந்தையாரும் மனம் மாறி, மடத்திற்குச் சென்று சிறியமகன் ஞானப்பிரகாசத்தை ஆசீர்வதித்துச் சென்றார்.

 

குருப்பட்டம்

1893 இல் குருமடத்தில் சேர்ந்து ஆறு வருடங்கள் குருத்துவக் கல்வி பெற்ற ஞானப் பிரகாசம் தமது 26ஆவது வயதில் அஃதாவது 1901 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதி ஒரு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

 

சமயத் தொண்டுகள்

சுவாமி ஞானப்பிரகாசர் குருவாகப்பட்டம் பெற்றபின், ஊர்காவற்றுறையில் முதன் முதல் தொண்டு செய்யத் தொடங்கினார். அங்கே கத்தோலிக்க நூல் நிலையம் ஒன்றை நிறுவி, நூல்களை இரவலாக கொடுத்து வாங்கி, மக்கள் இலகுவாக நூல்களைப் பெற்று வாசிக்க வழிகோலினார். இதுவே ஊர்காவற்றுறையில் முதல் முதல் ஏற்பட்ட நூல் நிலையமாகும்.

 

சமயத் தொண்டுகள்

சுவாமி ஞானப்பிரகாசர் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணத்து ஆசனக்கோவிலில் சில மாதங்கள் சேவை செய்தபின் நல்லூரைச் சேர்ந்த திருநெல்வேலியை தமது தலைமைத் தானமாகக் கொண்டு 1902ஆம் ஆண்டு தொடக்கம் சமயத் தொண்டை விரிவாகச் செய்யத் தொடங்கினார்.

 

திருநெல்வேலி,       

நல்லூர்,

கொக்குவில்,

கோண்டாவில்,

நீர்வேலி,

வடகோப்பாய்,

தென்கோப்பாய்,

உரும்பிராய்,

மல்வம்(உடுவில்),

கூரம்பன் (உடுவில்),

சண்டிலிப்பாய்,

மானிப்பாய்,

மூளாய்,

கச்சாய்,

மந்துவில்,

முகமாலை

 

முதலிய இடங்களில் தேவாலயங்கள் நிறுவி அவற்றுடன் பாடசாலைகளையும் ஆரம்பித்து நடாத்தி இவை மூலமாக ஏழை மக்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் உன்னத நிலைக்குக் கொண்டுவர அரும்பாடுபட்டார்.

 

இவற்றுடன் சமய சம்பந்தமான நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்டு, மக்களுக்குத் திருமறை அறிவையூட்டி, திருமறை அனுட்டானங்களையும் சரிவரச் செய்வதற்கு உதவிபுரிந்தார்.

நல்லூரில் புனித சவேரியார் ஆலயத்தைக் கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் என அழைக்கப்பட்டார்.

 

மொழி ஆராய்வு -  72 மொழிகள்

இளமையிலே கற்ற பாடசாலைகளில் தமிழ், ஆங்கிலம், வடமொழியினை சிறந்த ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்டதாலும் உத்தியோக காலத்தில் சிங்களத்தினை கற்றதாலும் மொழி ஆராய்வில் அவரை மிகுந்த ஈடுபாட்டில் ஏற்படுத்தியது.

குருமடத்தில் கற்ற இலத்தீன், பிரஞ்சும் அவருக்கு பலமொழி ஆய்வில் ஊக்கத்தை கூட்டியது. இதனால் அவர் ஏறக்குறைய 72 மொழிகளை கற்றுணந்தார்.

 

தொடர்ந்தும்  திருச்சபையில் குருப்பதவியில் இணைந்ததால் ஆராச்சியறிஞராகும் வாய்ப்புகள் அதிகரித்தது. இசை, நாடகம், கவிதை போன்ற துறையில் மென்மேலும் திறம்பட ஆய்வுகளுக்கு இவரால் அரையாண்டு காலங்களுக்கு மேல் தொடர முடிந்தது.

 

இலங்கையில் முழுமையான பல்கலைக் கழகம் இல்லாத காலம் அது. அதிலும் சுவாமிகள் தேர்தெடுத்த துறைகளாகிய தமிழர் வரலாறு, யாழ்ப்பாண வரலாறும் தொல்பொருளியலும், மொழியியல்  ஆகிய துறைகள் வளர்ச்சி பெற்றிருக்காத காலம் அது. மேலும் இரண்டாவது உலகமகாயுத்தத்தின் பின்னர்தான் நவீன மொழியியல் (Linguistics) துரித வளர்ச்சியடைந்து இன்றைய நிலையை எய்தியது.

 

யாழ்ப்பபாண வரலாறோ பல்கலைக்கழகத்தினர் தொட்டுப்பாராத துறையாக அறுபதுகள் வரை அமைத்திருந்தது. இந்நிலையில் சுவாமிகள் இத்துறையில் ஈடுபாடுகொண்டு அவற்றில் முறையான பயிற்சி இல்லாத போதிலும் தானாக அத்துறைசார் நுட்பங்கங்களைக் கற்றுத் தன்னாலான தொண்டினைச் செய்தமையே நாம் கருத்திற் கொள்ளவேண்டிய விசயமாகும்.

 

பன் மொழிக் கல்வி

சுவாமியாரவர்கள் தமிழ், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம், மலையாளம், லத்தீன் கிறீக், றோமன், போத்துக்கீசம், ஜேர்மன், பிரான்ஸ் ஆதியாம் முப்பதுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்று இவைகளின் உதவியுடன் தமிழ் மொழிக்கும் பிறமொழிக்கும் இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்து அறிந்து தமிழ் மொழியின் தொன்மை இனிமை என்பவற்றை ஆதாரபூர்வமாக உலகறிய எடுத்துக் காட்டினார்.

 

பிறதேசங்களில் இருந்து இலங்கை வந்த பல பேரறிஞர்கள் பழங்காலக் கல்வெட்டுக்களை வாசித்து அறிவதற்கு சுவாமி ஞானப்பிரகாசரின் பன் மொழியறிவு உதவியாக இருந்தது. இதனால் அவருக்கு பெருங்கீர்த்தியும் ஏற்பட்டது

இவரது பன்மொழியறிவையும் சொல்லாராய்ச்சித் திறனையுங் கண்டு ஈழத்துத் தமிழ்ப்புலவர்.மன்றம் இவரைப் பாராட்டி சொற்கலைப்புலவர் என அழைக்கலாயிற்று. அத்தகைய புகழுக்குரியவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர். வடமொழி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளை நன்கு கற்றிருந்த சுவாமியவர்கள் எழுபது மொழிகளைப் பற்றி அறிந்திருந்தார்.

 

நூல் ஆக்கங்கங்கள்

தமிழர் பூர்விக சரித்திரம் யாழ்ப்பாணத்தரசர்கள் யாழ்ப்பாண சரித்திரம் இந்திய நாகரிகம் தமிழர் வரலாறு தமிழரிடையே சாதி பிறந்த முறை தமிழரின் பூர்வ இருப்பிடம் தமிழ் அமைப்புற்ற வரலாறு தமிழ்ச் சொற்பிதிர் தமிழ்த் தாதுக்கள் மொழிக்குடும்பம் தருக்க சாஸ்திரம்

என்பன சுவாமியவர்களின் அரிய நூல்களாகும். ஒரு மொழியின் ஆராட்சி வேலைகளில் அகராதி தொகுப்பதும் ஒரு துறையாகும். மிகக் கடினமான இத்துறையிலே யாழ்ப்பாணம் என்றுமே முன்னணியில் நின்றிருப்பதை எவருமே ஒப்புவர்.

 

இந்த அகராதி வரிசையில் புதியதொரு பாதையை வகுத்துச் சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி என்ற பெரும் பணியைச் செய்த இத்தொண்டே சுவாமியவர்களை தமிழரும் மேலைநாட்டாரும் என்றென்றும் நினைவில் வைத்திருக்கப் போதுமானது.

 

சமய சம்பந்தமாகவும் மொழி சம்பந்தமாகவும் சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய கட்டுரைகள் நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஆயிரக் கணக்காக வெளிவந்தன என்று கூறலாம். சுவாமியார் அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூற்றுக் கணக்கான நூல்களை வெளியிட்டார்.

 

50க்கும் மேற்பட்ட நூல்களைத் தாமே இயற்றி 30க்கும் மேற்பட்ட நூல்களை அச்சேற்றினார். சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும்.

'ஞான உணர்ச்சி' எனும் நூல் வீரமாமுனிவரால் எழுதப்பட்டதன்றுசாங்கோபாங்க சுவாமிகளே அந்நூலை எழுதினார் என இடித்துரைத்தார். 

 

யாழ்ப்பாண வைபவ விமரிசனம்

18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால் யாழ்ப்பாண வரலாற்றை  எடுத்துரைக்கும் பொருட்டு எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலையில்  தாம் கண்ட வரலாற்று முரண்பாடுகளை யாழ்ப்பாண வைபவ விமரிசனம் என்னும் நூலில் ஞானப்பிரகாசர் எடுத்துக் காட்டியுள்ளார்

 

ஞானப்பிரகாசர் நூல்களின் பிரதானமான பெயர்கள்

சில பின்வருவனவாகும்

(1) தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும்

(2) ஆதிகாலப் பாப்புமார் சரித்திர சங்கிரகம்

(3) தமிழ் அமைப்புற்ற வரலாறு

(4) தமிழ்ச் சொற்பிறப்பாராய்ச்சி

(5) சொற்பிறப்பு ஒப்பியல் தமிழகராதி

(6) தருக்க சங்கிரகச் சுருக்கம்

(7) யாழ்ப்பாண வைபவ விமர்சனம்

(8) செகராசசேகரன் (ஒரு சரித்திர நாவல் )

(9) தமிழரின் ஆதியிருப்பிடமும் பழஞ் சீர்திருத்தமும்(அச்சேறவில்லை )

(10) ஆண்டவர் சரித்திரம்

(11) சுப்பிரமணியார் ஆராய்ச்சி

(12) பிள்ளையார் ஆராய்ச்சி

 

(13)   India's Ancient Chinorology and Culture

(14)   The origin of caste among the Tamils

(15)   A History of the Catholic Church in Ceylon

(16)   Twenty Five years of Catholic Progress in the Diocess of Jaffna.

(17)   The Historical aspect of Christianity and Buddhism. ' (

18)    Kings of Jaffna during the Portuguese Period of Ceylon History.

(19)   Catholicism in Jaffna

(20)   Philosophical Saivism

 

ஜேர்மனிய தபால் முத்திரை

ஜேர்மனிய அரசாங்கம் தனது தபால் முத்திரை ஒன்றிலே நமது தமிழ்பெரியார் சுவாமி ஞானப்பிரகாசரின் உருவத்தைப் பொறித்து வெளியிட்டதென்றால் அவரின் பெருமையை யாவரும் உணரலாம்.

 

மறைவு

சுவாமி ஞானப்பிரகாசர் அவரை பீடித்திருந்த நெருப்புக்காய்ச்சல் அவருடைய உயிரை விட்டுவைக்கவில்லை.

மொழிவல்லுனர் தமிழ் பேரறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர் சமயப்பற்று, மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்பவைகளால் தூண்டப்பெற்று இரவு பகல் என்று பாராது உழைத்து வந்ததினுல் உலகம் முழுவதிலும் பாராட்டுப்பெற்று வாழ்ந்து வந்த பன்மொழிப் புலவரும் துறவியுமாகிய சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் தமது எழுபத்திரண்டாவது வயதில் அஃதாவது 1947ஆம் ஆண்டு சனவரி மாதம்,22ஆம் திகதி இறைவன் திருவடி எய்தினார்.

 

நினைவு முத்திரை வெளியீடு

சுவாமி ஞானப்பிரகாசருக்கு மதிப்பளிக்குமுகமாக இலங்கை அரசு அவரது படத்துடன் கூடிய அஞ்சல் முத்திரை ஒன்றும், சிறப்பு முதல் நாள் உறை ஒன்றையும் 1981 மே 22 இல் வெளியிட்டது. வழமையாக நினைவு முத்திரைகள் தலைநகர் கொழும்பிலேயே வெளியிடப்படும்.

 

ஆனால் இந்த முத்திரை ஞானப்பிரகாசரின் ஊரான  யாழ்ப்பாணத்தில்  வெளியிடப்பட்டது.  வீரசிங்கம் மண்டபத்தில் சிறப்பாக நிறுவப்பட்ட அஞ்சல் அலுவலகத்தில் யாழ் ஆயர் அதி வணக்கத்துக்குரிய எஸ். தியோகுப்பிள்ளை  ஆண்டகை முன்னிலையில் யாழ்ப்பாணம் பிரதம அஞ்சல் அதிபர் தி. தியாகராசாவிடமிருந்து  நினைவு முத்திரையுடன் கூடிய முதல் நாள் தபால் உறையை மாவட்ட அமைச்சர் யு. பி. விஜயக்கோன் பெற்றுக் கொண்டார்.