லைடன் தீவு (Layden island) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் பெரிய தீவு ஆகும். வேலணைத்தீவு என்றும் இத்தீவு அழைக்கப்படுவதுண்டு.
கி.பி. 1658 முதல் கி.பி. 1796 வரை யாழ்ப்பாணத்தை ஆண்ட ஒல்லாந்தர் யாழ்ப்பாணக் குடாநாட்டை அண்டியிருந்த தீவுகள் ஏழுக்கும் ஒல்லாந்து (Holland) நாட்டின் முக்கிய நகரங்களின் பெயர்களை இட்டார்கள். இவற்றில் தெற்கு ஒல்லாந்தில் உள்ள லெய்டன் (Leiden) (யாழ்ப்பாணத்தில் இப்பெயரை லைடன் என்றே உச்சரிப்பது வழக்கம்) நகரத்தின் பெயர் இத் தீவுக்கு வழங்கப்பட்டது.
1. சுருவில்
2. நாரந்தனை
3. கரம்பொன்
4. ஊர்காவற்றுறை (காவலூர்)
5. பரித்தியடைப்பு
6. புளியங்கூடல்
7. சரவணை
8. வேலணை
9. அல்லைப்பிட்டி
10. மண்கும்பான்
இவற்றுள் ஊர்காவற்றுறை (காவலூர்) பிரித்தானியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத்தில் வடக்கு இலங்கையில் முக்கியத்துவம் பெற்றிருந்த துறை முகங்களில் ஒன்றாகும்.
லைடன் தீவின் கிராமங்களைப் பற்றியொரு பாடல் தொகுதி
ஊர்காவர்றுறை, கரம்பன், சுருவில்
உற்றநற் புளியங்குடல் நாரந்தனை
பேர்மிகு சரவணை, வேலனை மண்கும்பான்
பெருமை சொல் மண்டைத்தாவல் லைப்பிட்டி
சேர்ந்தே லைடன் தீவெனும் நிலமாம்
(கவிஞர் சக்தி அ.பால.ஐயா)
இதன் அளவு வடக்குத் தெற்காக 6 கிலோமீட்டரும், கிழக்கு மேற்காக 8 கிலோமீட்டரும் ஆகும். மொத்தப் பரப்பளவு அண்ணளவாக 48 சதுர கிலோமீட்டர்
அமைவிடமும், போக்குவரத்துத் தொடர்புகளும்
வேலணைத்தீவின் நேர் வடக்கே அமைந்துள்ளது காரைநகர் என்று பொதுவாக அழைக்கப்படும் காரைதீவு. தென் மேற்குத் திசையில் புங்குடுதீவும், தென் கிழக்குத் திசையில் மண்டைதீவும் அமைந்துள்ளன. மண்டைதீவு யாழ்ப்பாண நகரத்துக்கும் வேலணைத்தீவுக்கும் இடையில் உள்ளது. வேலணைத்தீவு பண்ணை கடல் வழிச் சாலையினால், மண்டைதீவுக்கு ஊடாக யாழ்ப்பாண நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு, காரைதீவு என்பவற்றை இத் தீவுடன் இணைக்கும் கடல் வழிச் சாலைகளும் உண்டு.
நெடுந்தீவு (Neduntheevu) இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று. ஒல்லாந்தர் இத்தீவை டெல்வ்ற் (Delft) என்று பெயரிட்டு அழைத்தார்கள். இன்றும் ஆங்கிலத்தில் இத்தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து மற்றெல்லாத் தீவுகளிலும் கூடிய தொலைவில் அமைந்திருக்கும் தீவு இதுவே. யாழ்ப்பாணத்திலிருந்து இதன் தூரம் 45 கிலோமீட்டர் ஆகும். ஆனால் இந்தியாவின் இராமேஸ்வரக் கரையிலிருந்து இதன் தூரம் 38 கிலோமீட்டர் மட்டுமே.
இதன் அளவு வடக்குத் தெற்காக 6 கிலோமீட்டரும், கிழக்கு மேற்காக 8 கிலோமீட்டரும் ஆகும். மொத்தப் பரப்பளவு அண்ணளவாக 48 சதுர கிலோமீட்டர்
வட்டாரம் | G.S.பிரிவு | ||
---|---|---|---|
1 | நெடுந்தீவு ஒன்று | J01 | நெடுந்தீவு மேற்கு |
2 | நெடுந்தீவு இரண்டு | J03 | நெடுந்தீவு மத்தி மேற்கு (பகுதி) |
3 | நெடுந்தீவு மூன்று | J02 | நெடுந்தீவு தெற்கு |
4 | நெடுந்தீவு நான்கு | J03 | நெடுந்தீவு மத்தி மேற்கு (பகுதி) |
5 | நெடுந்தீவு ஐந்து | J03 | நெடுந்தீவு மத்தி மேற்கு (பகுதி) |
6 | நெடுந்தீவு ஆறு | J04 | நெடுந்தீவு மத்தி |
7 | நெடுந்தீவு ஏழு | J05 | நெடுந்தீவு மத்தி கிழக்கு |
8 | நெடுந்தீவு எட்டு | J06 | நெடுந்தீவு கிழக்கு |
ஊர்காவற்துறை தொகுதி வேலணை D.S. பிரிவு வேலணை பிரதேச சபை
வட்டாரம் | G.S.பிரிவு | ||
---|---|---|---|
1 | சரவணை | J12 | வேலணை வடக்கு |
J20 | சரவணை கிழக்கு | ||
J21 | சரவணை மேற்கு | ||
2 | மண்கும்பான் | J11 | மண்கும்பான் |
J13 | வேலணை வடகிழக்கு | ||
3 | அல்லைப்பிட்டி | J10 | அல்லைப்பிட்டி |
4 | மண்டைதீவு | J7 | மண்டைதீவு கிழக்கு |
J8 | மண்டைதீவு மேற்கு | ||
J9 | மண்டைதீவு தெற்கு | ||
5 | வேலணை கிழக்கு | J14 | வேலணை கிழக்கு |
J8 | வேலணை தென்கிழக்கு | ||
J9 | வேலணை கிழக்கு மத்தி | ||
6 | வேலணை தெற்கு | J17 | வேலணை தெற்கு |
7 | வேலணை மேற்கு | J18 | வேலணை மேற்கு மத்தி |
J19 | வேலணை மேற்கு | ||
8 | நயினாதீவு வடக்கு | J34 | நயினாதீவு வடக்கு |
J35 | நயினாதீவு மத்தி | ||
9 | புங்குடுதீவு மேற்கு | J27 | புங்குடுதீவு வடக்கு |
J29 | புங்குடுதீவு தென்மேற்கு | ||
J30 | புங்குடுதீவு மத்தி மேற்கு | ||
J32 | புங்குடுதீவு வடகிழக்கு | ||
J33 | புங்குடுதீவு மேற்கு | ||
10 | புங்குடுதீவு கிழக்கு | J22 | புங்குடுதீவு வடகிழக்கு |
J23 | புங்குடுதீவு கிழக்கு | ||
J24 | புங்குடுதீவு தென்மேற்கு | ||
11 | புங்குடுதீவு தெற்கு | J25 | புங்குடுதீவு தென்கிழக்கு |
J26 | புங்குடுதீவு தெற்கு | ||
J28 | புங்குடுதீவு மத்தி வடக்கு | ||
J31 | புங்குடுதீவு மத்தி கிழக்கு | ||
12 | நயினாதீவு தெற்கு | J36 | நயினாதீவு தெற்கு |
ஊர்காவற்துறை தொகுதி
ஊர்காவற்துறை D.S. பிரிவு
ஊர்காவற்துறை பிரதேச சபை
வட்டாரம் | G.S.பிரிவு | ||
---|---|---|---|
J37 | அனலைதீவு வடக்கு | ||
J38 | அனலைதீவு தெற்கு | ||
J39 | எழுவை தீவு | ||
J49 | ஊர்காவற்துறை | ||
J50 | பருத்தியடைப்பு | ||
J51 | கரம்பன் | ||
J52 | கரம்பன் கிழக்கு | ||
J53 | கரம்பன் தென்கிழக்கு | ||
J54 | கரம்பன் மேறகு | ||
J55 | நாரந்தனை வடக்கு | ||
J56 | நாரந்தனை வட மேற்கு | ||
J57 | நாரந்தனை | ||
J58 | நாரந்தனை தெற்கு | ||
J59 | சுருவில் | ||
J60 | புளியங்கூடல் |
வட்டுக்கோட்டை தொகுதி காரைநகர் D.S. பிரிவு காரைநகர் பிரதேச சபை
வட்டாரம் | G.S.பிரிவு | ||
---|---|---|---|
1 | காரை மேற்கு | J40 | காரைநகர் மேற்கு |
J41 | காரைநகர் வடமேற்கு | ||
2 | காரை வடக்கு | J46 | காரைநகர் வடக்கு |
J48 | காரைநகர் மத்தி | ||
3 | வலந்தலை | J47 | காரைநகர் வடகிழக்கு |
4 | களபூமி | J42 | காரைநகர் கிழக்கு |
J43 | காரைநகர் தென்கிழக்கு | ||
5 | காரை தென்மேற்கு | J45 | காரைநகர் தென்மேற்கு |
6 | காரை தெற்கு | J44 | காரைநகர் தெற்கு |